பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

175




தத்துவ இயல் எப்பொழுது தோன்றியதோ, அப்பொழுதே உளவியலும் உண்டாகிவிட்டது, உருவாகி வேரூன்றி விட்டதுதான் உண்மை நிலை என்று உரைப்பாரும் உண்டு.

தத்துவ ஆராய்ச்சியாளர்கள், மனித இனத்தின் இயற்கைத் தன்மைகளை ஆய்வு செய்து விளக்கம் பெற முனைகிற பொழுதெல்லாம், உள்ளத்தையும் சேர்த்தே ஆராய்ந்திருக்கின்றனர்.ஆகவே, தத்துவமும் உளவியலும் ஒன்றுக்கொன்று இணைந்து உதவியிருக்கின்றன. ஆக, இது காலத்தில் பழமைபோல இருந்தாலும், தான் கொண்ட கோலத்தால் இன்றும் புதுமைத்துவம் பூண்டதாகவே விளங்கி, வளமூட்டுகிறது.

உளமா!மனமா!

உள்ளம் என்ற ஒன்று இருப்பதாக எல்லோரும் நம்பினர். அது பற்றி ஆய்வு நடத்தினர் என்றாலும், அவர்களுக்கு அதில் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படவில்லை.

உள்ளம் என்பது என்ன என்று அவர்களால் விளக்கிக் கூற இயலவில்லை. அதற்கு உருவம் கிடையாது. வடிவம் கிடையாது. அதைப் பார்க்கவும் முடியாது. தொட்டுப் பார்க்கவும் முடியாது. தொட்டுப் பார்க்கவும் முடியாது. அதற்கு கனமும் இல்லை. எடையும் இல்லை. அதற்கு ஒர் அமைப்பும் இல்லை.

இத்தகைய ஒன்றைப் பற்றி, எல்லோரும் விளக்கம் பெறவும் முன் வந்தது விந்தையான ஒன்றுதான்.

கிரேக்கர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் கோட்பாடும் போல, குடால்ப் கியோகிலி என்பவரும் 1590 ஆம் ஆண்டே, உளவியல் பற்றி நிறையப் பேசி சிந்தித்து