பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

189


 உண்டாகும் நடத்தையின் மாறுதல்கள் அளிக்கின்ற அறிவுச் சிறப்பாகும்.

மனித இனத்தில் பிறக்கின்ற ‘சின்னஞ் சிறுசுகள்’ தான் மனோநிலையில், உணர்வுகளில், உடலுக்குத் தேவையானவற்றில் வளர்ச்சி பெறாமல், குழந்தைப் பருவத்தில் கஷ்டப்படுகின்றனர்.

நாளாக நாளாக, அவர்கள் வளர்கிற பொழுதே அடைகின்ற அனுபவங்கள் மூலமாக அறிவினைப் பெற்றுக் கொண்டு, மற்ற எல்லா உயிரினங்களையும்விட, ஆற்றல் மிக்கவராக விளங்கி விடுகிறார்கள்.

புதிய புதிய வாழ்க்கைச் சூழல்கள் அனுபவங்களை வழங்கி விடுவதோடு, அறிவையும் வளர்த்துக் கூர்மையாக்கி விடுகின்றன.அத்துடன், சூழலை சுமுகமாக அணுகி வெற்றி பெறத்தக்க நிலைமைகளையும், வலிமைகளையும் வளர்த்து விடுகின்றன. ஏனெனில், உடலாலும், மனதாலும், உணர்வாலும் ஒட்டு மொத்தமாகவே குழந்தைகளைக் கம்பீரமாக வளர்க்கும் பணியினை, சூழல்கள் மேற்கொள்கின்றன.

ஹென்றி ஸ்மித் எனும் அறிஞர் கூறுகிறார் இப்படி:- “கற்றல் என்பது புதிய நடத்தைகளைக் கற்றுத்தருகிறது. சேமித்துத் தருகிறது. அது பழைய நடத்தைகளைப் பலஹீனப் படுத்தி விடுகிறது அல்லது பழைய நடத்தைகளுக்குப் பலம் கூட்டி விடுகிறது.”

சூழ்நிலைகளில், இக்கட்டான நிகழ்ச்சிகளே ஒருவருக்கு நடத்தையில் நுணுக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. பல்வேறு விதமான, வித்தியாசமான சூழ்நிலைகளுக்கேற்ப, ஆட்படுகிற மனிதர்களும்