பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

உடற்கல்வி என்றால் என்ன?


 நடத்தையில் மாறுபட்டு நடந்துகொள்கிறார்கள். அப்படி நடக்கும் அனுபவங்கள் ஆற்றலை வழங்குவதுடன், அறிவையும் நன்கு வளர்த்து விடுகின்றன.

ஆகவே, கற்றல் என்பது ஏற்படும் அனுபவங்களின் விளைவாக நடத்தையில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்துகிற ஒன்றாக அமைகிறது என்றே நாமும் அறுதியிட்டுக் கூறலாம்.

கற்றல் என்பது காலையில் தொடங்கி, மாலையில் முடிந்துபோகிற காரியமல்ல. அது வாழ்க்கை முழுவதும் விடாது தொடர்ந்து நடக்கிற, மிகுந்து வருகிற காரியமாகும்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அனுபவத்தை அளிப்பதாகப் பிறக்கிறது. பிறக்கும் அனுபவங்களுக்கு அனுசரித்துப் போகின்ற நடத்தைகளுடன், குழந்தையும் நடந்து கொள்கிறது. மாறிக்கொள்கிறது.

இதனால்தான், ஒருவரது சுற்றுப்புறச் சூழலும், பாரம்பரிய குணாதிசயங்களும் கற்றலுக்கு மிகுந்த வலிமையான வழிகாட்டல்களாக அமைந்துள்ளன. இப்படிக் கற்றுக்கொள்வது என்பது அறிவு முதிர்ச்சிக்கும் அழைத்துச் செல்கிற ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது.

கற்றுத்தரும் கோயில்கள்

கல்வி நிலையங்கள் எல்லாமே கற்றுத்தருகின்ற கோயில்களாகவே விளங்குகின்றன. கோயிலில் மிக முக்கியமானவர்களாக விளங்குபவர்கள் இரண்டு வகையினர். கற்பிப்பவர்கள் கற்பவர்கள் ஆவார்கள்.

கற்றுத்தருபவர்கள் ஆசிரியர்கள். அதை ஏற்றுக் கொள்பவர்கள் மாணவர்கள். இந்தக் காரியம் இனிதாக,