பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

207


 இருக்கிற தென்றால், அதை மட்டும் வளர்த்தால், மற்ற நுண் பிரிவுப் பகுதிகள் எல்லாம் நிறைவாக வளர்ந்து கொள்ளும் என்பதைத் திட்ட வட்டமாகச் சொல்ல முடியாது.

இந்த மனப் பிரிவுகளுக்கு உள்ளேயே பல்வேறு உட்பிரிவுகள் இருப்பதால், ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்குமே தவிர, ஒன்றை வளர்க்க மற்றொன்று வளராது என்பதைக் குறிக்க ஒரு உதாரணம் கூறுவார்கள் வல்லுநர்கள்.

நினைவாற்றல் என்றால் அவை எத்தனையோ வகைப்படுகின்றன. காதுமூலம் நினைவுகொள்ளல், கண்வழி நினைவாற்றல், செயல்வழி நினைவாற்றல் என்று பல உண்டு. செவிவழி பெறுகிற நினைவாற்றலைக் கொண்டு, செயல் வழிபெறுகிற நினைவாற்றல் செழித்து வளராது. சில சமயங்களில், எதிர்மாறான விளைவுகள் ஏற்பட்டுவிடும்.ஆகவே, மனத்தின் நுண்பிரிவுக் கொள்கையானது, நிலைத்து நிற்க இயலாமற்போயிற்று.

2. பொதுக் குறிப்புக் கொள்கை (Common Element Theory)

தார்ண்டைக், உட்ஒர்த் எனும் இருவல்லுநர்கள், இந்தக் கொள்கையைத் தங்கள் அனுபவத்தின் மூலமாக உருவாக்கித் தந்தார்கள்.

அதாவது பொதுவான அமைப்புள்ள பொருட்ளால், ஒன்றின் மூலமாக ஒன்றினால், பயிற்சியை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். உதாரணமாக, பூகோளமும் சரித்திரமும் இணைந்து உதவிக் கொள்கின்றன. இரண்டுக்கும் படங்கள் (Maps) தேவை. ஆகவே,