பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

231


குள்ளே தோன்றி, உடலுறுப்புக்களின் ஒன்றிய ஒருங்கிணைந்த இயக்கத்தால் வெளிப்படும் பாதுகாப்புச் சக்தி முறைகளாகும்.

இப்படிப்பட்ட உணர்ச்சிகளை திறப்படுத்தி, அதன் மூலம் கட்டுக்கோப்பான வளர்ச்சியைப் பெறுமாறு, குழந்தைகளுக்கு விளையாட்டுச் செயல்களை ஏற்படுத்தி, வளர்த்திட முயல வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கிக் கற்பிக்க வேண்டும்.

சில திறன்களைக் கற்பிக்கும்போது, பிள்ளைகள் பய உணர்ச்சியால், பின் வாங்கிப்போவதும் உண்டு. கற்க முன் வராமல் வெறுப்படைவதும் உண்டு வெட்கத்தால் கற்றுக் கொள்ள இயலாமற்போவதும் உண்டு.

அப்படிப்பட்ட குழந்தைகளின் அச்சம் அகற்றி, திறன்களை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி, உணர்ச்சி பூர்வமாகக் கற்றுக் கொள்ள அன்புடன் ஆசிரியர்கள் வழிகாட்டவேண்டும்.

வெறுப்பு, பயம், கோபம் போன்ற உணர்வுகள் செயல்படுவதிலிருந்து சற்று பின் வாங்கச் செய்யும் பண்புகளாகும். அல்லது இயற்கையாகவே, எதிர் மறையாகவே செயல்படவும் தூண்டிவிடுவதாகும்.

இன்பமயமான உணர்வுகளான சந்தோஷம், அன்பு இரக்கம், மகிழ்ச்சிகரமாக செயல்பட உதவும். அப்படிப்பட்ட உணர்வுகள் அழகான நடத்தைகளை ஏற்படுத்தி, சமுதாயச் செழுமைக்கு உதவுவனவாகவும் உருவாக்கிவிடும்.

இப்படிப்பட்ட அடிப்படை உணர்வுகளை ஆராய்ந்து, பயம், எரிச்சல், கோபம் போன்றவற்றை