பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

உடற்கல்வி என்றால் என்ன?


அகற்றி, அந்தக் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி, அதில் ஆழ்ந்த பற்றினை விளைவித்து, ஒற்றுமையை நிலை நாட்ட ஆசிரியர் உதவ வேண்டும்.

உடற் கல்வித் துறையினருக்கு, உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, உபயோகமான வழிகளில் வழி நடத்திச் செல்லும் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

குழந்தையை ‘உடலால் மனதால்’ என்று பிரித்து தனிமைப்படுத்தாமல், முழுமையான குழந்தை என்று கண்டுகொண்டு, அவர்களின் உடலையும் உணர்வுகளையும் செம்மையாக்கிட, சிறப்பான பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், நோய் வாய்ப்பட்ட உடலோ அல்லது கட்டுப்பாடற்ற மனமோ, எதுவும் சரிவர செயல்படுத்த விடாமற் செய்து விடும்.

குழந்தைகளில் உணர்வுகளை ஊகித்து அறிந்து, அவர்களின் சூழ்ந்து கிடக்கும் சக்தி திறமை போன்றவற்றை அறிந்து, அதற்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களின் உணர்ச்சிக்குட்பட்ட வளர்ச்சிதான், உலக வாழ்வை சந்திக்கக் கூடிய சக்தியையும் திறமையையும் வளர்த்து விடுகிறது என்பதை ஆசிரியர்கள் மறந்துவிடக்கூடாது.

இப்படிப்பட்ட இதமான காரியத்தைத் தான் விளையாட்டுக்கள் ஏற்படுத்தி உதவுகின்றன.மகிழ்ச்சியும் சந்தோஷமும் உடற்பயிற்சியிலும் கற்கும் நேரத்திலும் கலந்து ஏற்படுகிறபோது, கற்பதில் அதிக வேகம் ஏற்படுகிறது என்பதால், அந்த சூழ்நிலையை ஆசிரியர்கள் அமைத்துத் தருவது அறிவார்ந்த செயலாகும்.