22
உடற்கல்வி என்றால் என்ன?
பயனுள்ள பழக்க வழக்கங்களை தீமை பயக்காத செயல் முறைகளை வளர்த்து, நல்லொழுக்கம், நாணயம், நேர்மை தியாகம் நிறைந்த சீலர்களாக, ஒழுக்கச செல்வர்களாக வாழ்க்கை நடத்தவே கல்வி உதவுகிறது.
ஆகவே, கல்வியானது அறிவைப் பெற்றுக் கொள்ள நிறைய வாய்ப்புக்களை வழங்குகிறது. அதை படிப்பறிவு என்றும், அனுபவ அறிவான பட்டறிவு என்றும் பிரித்துக் கூறுவார்கள்.
பள்ளிகளில் பயில்வது படிப்பறிவு, அத்துடன் பெரியவர்கள் தங்கள் அனுபவங்களைப் புத்தகவடிவில் கொடுத்துச் சென்றதைப் பயில்வது பட்டறிவு.
இப்படிப்பட்ட அனுபவ அறிவை உடற்கல்வியும் அளிக்கிறது. என்கிறார்கள் கல்வி வல்லுநர்கள்,
பொதுக்கல்வியின் இலட்சியத்தை, உடற்கல்வியானது பெரிதும் வளர்த்து, பொதுமக்களுக்கு வழி காட்டுகிறது, என்னும் குறிப்பு, எப்படியெல்லாம் பாெருத்தமாக அமைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
அதற்கு முன்னதாக, அடுத்து வரும் அத்தியாயத்தில் உடற்கல்வி என்றால் என்ன என்னும் வினாவுக்கு விடை தெரிந்து கொள்வோம்.