238
உடற்கல்வி என்றால் என்ன?
கற்பவர்களுக்கு மனக்களைப்பும் சலிப்பும் ஏற்படாதவாறு, வெறுப்பும் குறுகுறுப்பும் உண்டாகாதவாறு, கற்பித்திடவேண்டும்.
இத்தகைய சூழ்நிலைகள் எப்படி அமையும் என்றால், அதற்கும் பல காரணங்களை அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். அந்தக் காரணங்களையும் அறிந்து கொள்வது நன்மை பயக்கும்.
வளராநிலை ஏற்படுத்துகின்ற சூழ்நிலைகள்
முந்தைய கற்பித்தல் அவ்வளவாகக் கற்பவர்களுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தாமல் இருத்தல்.
அதிகமாகக் கற்றதால் அல்லது அதிகமான போதனைகளால் மனக்களைப்பு, உடல் களைப்பு ஏற்பட்டு விடுதல்.
கற்பதில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது இருத்தல்.
அடிக்கடி ஆசிரியர்களை மாற்றிக் கொண்டிருத்தல். ஆசிரியர்களும் கற்பிக்கும்போது, அடிக்கடி கற்பிக்கும் முறைகளை மாற்றி விடுதல்.
சொல்கின்ற அல்லது கற்பிக்கின்ற திறமைகளை, அடிக்கடி நினைவுபடுத்தாமல், அப்படியே விட்டுவிடுதல், அல்லது நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால், கற்பதில் தேக்கம் ஏற்பட்டுப்போகிறது.
ஆசிரியர்களின் கடமை
ஆசிரியர்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருந்து, இப்படிப்பட்ட வளரா நிலை எழாமல், பத்திரமாகக் கற்பிக்க வேண்டும்.