பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

உடற்கல்வி என்றால் என்ன?


களுக்கு அல்ல என்ற தடிக்குணமும் மடத்தனமும் நிறைந்தவர்கள் நல்ல தலைவர்கள் ஆகிவிட முடியாது.

கட்டுப்பாடு,ஒழுக்கம், கடமை உணர்வு, நீதி காக்கும் நெஞ்சம், நியாயத்துக்குப் பணிகின்ற பெருந்தன்மை, உள்ள தலைவர்களே தொண்டர்களுக்கு நல்ல வழிகாட்டி ஆவார்கள் உலகமும் அவரை வாழ்த்தி, வணங்கிப் பின்செல்லும்.

அதுபோலவே உடற்கல்வி ஆசிரியர்களும் சத்திய சீலர்களாக, உத்தமப் பண்பாளர்களாக இருந்தால்தான், உடன் இருக்கும் மாணவர்களும், ஆசிரியரைப் பின்பற்றி, அருங்குண மாணவர்களாக வாழ்ந்திட விரும்புவார்கள்.

ஒழுக்கமற்ற ஆசிரியர்கள் பழிக்கப்படுவர்.வெறுக்கப்படுவர்.அவர் உபதேசம் வெறும் வாய்மொழியாகத் தான் போகுமே தவிர, வேத மொழியாகாது. ஆகவே, ஆசிரியர்கள் இக்கருத்தைப் பின்பற்றிக் கண்ணியவான்களாக வாழும் திண்ணியராக வாழ்ந்திட வேண்டும்.

தலைவராவது எளிதல்ல

யாரும் தலைவராக உயர்ந்து விட முடியாது. தலைவராவது அவ்வளவு எளிதான காரியமுமல்ல.

வாழ்க்கை என்பது சாதாரண மண்மேடல்ல. எளிதாகத் தாண்டிச் செல்வதற்கு அது பிரமாண்டமாக எதிரே நிற்கும் பெரிய மலை போன்றது. அதில் ஏற மனத்துணிவும், உடல் வலிவும், கடுமையான முயற்சியும், கலங்காத கடமை உணர்வும், குறையாத கொள்கைப் பற்றும் வேண்டும்.அப்படிப்பட்டவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். வாழ்வாங்கு வாழ முடியும்.

மகிழ்ச்சி என்பது எது? எப்போது? நமக்குள்ளே இருக்கும் திறமைகளை, கஷ்டப்படுத்தி வெளிப்படுத்தி,