பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. உடற்கல்வியின் நோக்கமும் குறிக்கோளும்(Aims and Objectives)

நோக்கம் என்றால் என்ன?

‘கற்கும் மாணவர்களுக்குப் புதுப்புது அனுபவங்களைப் பொழிந்து, அவர்களிடையே நல்ல மாற்றத்தையும், நடத்தையில் ஒழுக்கத்தையும், அடுத்தவர்களுடன் அனுசரித்துப் போகின்ற பக்குவத்தையும் கல்வி அளிக்கிறது என்று அறிஞர்கள் கல்வியைப் பற்றி விளக்குகின்றார்கள்.

இத்தகைய அனுபவங்கள் தாம் வாழ்க்கைக்கேற்ற சிறந்த நோக்கத்தைப் படைத்துத் தருகின்றன. அந்த நோக்கத்தின் நுண்மையே, வாழ்வின் இலக்காகி விடுகின்றன.

உருவாகிய அப்படிப்பட்ட இலக்கினை அடைவதற்கு ஒரு சில அறிவார்ந்த வழி முறைகளும் நடை முறைகளும் உதவுகின்றன. அந்த வழி முறைகளே