டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
75
கல்விக் கொள்கையில் நல்லது எது? தீயது எது? ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கை எது? எதிர்பார்ப்புக்கு மாறாக இயங்குவது எது? மக்களின் மன விருப்பத்திற்கு முற்றிலும் ஈடுகொடுக்க முடியாத கொள்கைகள் எவை என்றெல்லாம், கல்விக் கொள்கை பற்றிய ஆய்வில் முடிவெடுக்கப்படுகின்றன.
அதுபோலவே, உடற்கல்வியிலும் ஆய்வு நிகழ்ந்து கொண்டு வருகிறது. உடற்கல்வியை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறவர்கள், வட்டார அளவில், மாநில, தேசிய, உலக அளவில் அவரவர்கள் தேவைக்கு ஏற்ப உடற்கல்வியை மாற்றி அமைத்துக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொள்வது, நிகழ்ச்சித்திட்டங்களை இன்னும் மக்களுடன் நெருக்கமாக உறவாட வைத்திட உதவுகிறது. அதனால், உடற்கல்வியும் மக்களின் நெஞ்சத்தில் ஆழமாக இடம் பெறவும், வெளிப்புற செயல்களில் விரிவாக வளர்ச்சியடையவும் வாய்ப்பு பெருகிவருகின்றது.
தத்துவ நம்பிக்கையில் தவழ்கிற உடற்கல்விக் கொள்கைகள் மக்கள் மனதில் வேரூன்றிக் கிடப்பதால், அவற்றையே செயல்பட வேண்டும் என்பது கட்டாய மில்லை.இன்னும் நன்றாக உடற்கல்வி முன்னேற மாற்றங் கள் தேவையென்றால், மரபுகளை சற்று மாற்றிக் கொண்டு, மேன்மையுடன் நடத்திச் செல்லவும் வேண்டும்.
நிலையாக எதையும் வைத்துக் காப்பாற்றுவது, ஒரு நிறைவான முன்னேற்றத்தை நல்கிவிடாது, ஆகவே, உடற்கல்வியாளர்கள், பழையதில் உள்ள நல்லனவற்றை வைத்துக் கொண்டு, புதியனவற்றை தேர்ந்தெடுக்கும்