92
உடற்கல்வி என்றால் என்ன?
தான் பயணத்தை மேற்கொண்டு செல்கிறது. அந்த நேரங்களில் ஏற்படுகின்ற செயல்கள், பிரதி செயல்கள், அனுபவங்கள், அவற்றிலே உண்டாகும் சோதனைகள், முயற்சிகள், தவறுகள் எல்லாம், சங்கிலி கோர்த்தாற் போல் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் வருகின்றன.
ஒவ்வொரு நாளும் இப்படி மனித வாழ்க்கையில் நடக்கின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால், மனிதர்கள், அவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டே வாழ்கின்றனர். ஏற்படுகின்ற நிகழ்ச்சிகள் எப்படி? எதற்கு? ஏன்? எவ்வாறு என்று கேள்விகளை எழுப்பி, காரணங்களை அறிந்து கொள்ளவும் மக்கள் முயற்சிக்கிறார்கள். அது தானே மனித மனத்தின் மகிமையாக இருக்கிறது.
உதாரணமாக, ஒருவன் ஆடுகளத்திலே விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் காலில் ஏதோ ‘பிடிப்பு ஏற்படுவது போன்ற உணர்வு. காலை மீண்டும் ஒரடி எடுத்து வைக்க இயலாத நிலைமை, அவன் விளையாடுவதை நிறுத்தி விட்டு, தனக்குண்டான தாக்குதலைப் பற்றி சிந்திக்கிறான்.ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? அதை எப்படி அகற்றுவது? இப்படி ஏற்படுகின்ற சிந்தனையும், அதைத் தொடர்ந்து ஏற்படுகிற செயல்களும்தான் அவனுக்கு அனுபவங்களையும், அகலாத அறிவுகளையும் வழங்குகின்றன. இதுதான் மனித வாழ்க்கையின் மகத்துவம். விளையாட்டு உலகின் விந்தையான அறிவுப் பரிமாற்றம்.
நமது மனமானது, நமக்கு ஏற்பட்டிருந்த முந்தைய அனுபவங்களை நன்றாக நினைவு படுத்திக் கொண்டு, நடந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சிகளில் ஏற்படும் நிலை