பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

சிறுவர்களின் இயற்கையான செயல் முறைகளை யும், இளைஞர்களின் தேவைகளையும், (மனிதர்களின்) பெரியவர்களின் ஆவலையும் அறிந்து அவற்றிற். கேற்ப உடற்கல்வி செயல்படுகிறது என்பதுதான் உண்மையான கொள்கையாகும்.

தனி ஒருவரின் இனிதான உடலைப்பற்றி, உடற் கல்வியின் நோக்கத்தை இங்கு காண்போம்.

1. உடலுக்கு நலத்தைத் தேக்கி, அனுதின மும் சுகமாக வாழவைப்பது.

2. உடலுக்குச் சிறந்த வலிமையையும் எதை யும் தாங்கும் சக்தியையும் அளிப்பது.

3. உடலால் நிமிர்ந்து நிற்கின்ற, செம்மாந்து (கம்பீரமாக) நடக்கின்ற, அமர்ந்திருக்கின்ற உட லமைப்பினை உருவாக்கித் தருவது.

4. நடையில், அங்கஅசைவுகளில், நளினமான அமைப்பினை நல்கிட உதவுவது.

5. நரம்புகளும் தசைத் திரள்களும் ஒருங் கிணைந்து, தேவைக்கேற்ப விரைவாகச் செயல்படும் வல்லமையை வளர்த்துவிடுவது.

6. நோய் அணுகாத சக்தி மிகுந்த உடலைத் தருவது.

உடலால் செழுமையடைகின்ற ஒருவனே, உள் ளத்தால் சிறந்தவகை ஆக்கி, அவனை பண்பாட்டில் பற்றுள்ளவகை மாற்றி, சமூகத்துக்கு ஒரு நல்ல குடி மகனை உருவாக்கித்தர முயல்கிறது நம் உடற்கல்வி.