பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் 2. அழகு என்றால் என்ன? நமது நோக்கம் உடலுககு அழகு சேர்ப்பது. நமது ஏக்கம் அழகை உடலுக்குள் கோர்ப்பது. உடலழகு பெறுவதும் வருவதும் எப்படி? அதாவது எடைப் பயிற்சிகள் மூலமாக எப்படி பெறுவது? என்பதுதான் நமது நினைப்பும் முனைப்பும். அழகு என்ற வார்த்தைக்குரிய உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொண்டால், ஆரம்பமே சுவையாக இருக்கும். சுகமாக சிரிக்கும். அழகு என்றால் என்ன? கவர்ச்சி என்றால் என்ன? இந்த இரண்டு சொற்களுமே காளையர்களையும் கன்னியர்களையும் கவர்ந்து கொண்டும், குழப்பிக் கொண்டும் இருக்கின்றன. கவர்ச்சி என்றால் மனதைக் கவருவது ஆனால், இக்காலக் கவர்ச்சி எனும் சொல் மனதை ஈர்த்து விடுவது. அதனோடு இரண்டறக் கலந்து விடுமாறு செய்வது என்ற ஒரு மாய உணர்வை, ஒருவிதமான மயக்க நினைவை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. கலைந்து போகிற கவருதலுக்கு கவர்ச்சி என்ற பெயர். வானவீதியில் மேகங்கள் வலம் வருவது கவர்ச்சி.