பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா - 13 அதேநேரத்தில், அற்புதமாகத் தெரிந்து, அநேகமாக அங்கேயே தொடர்ந்து இருந்து, ஆனந்தப்படுத்துகிற காட்சிக்குத்தான் அழகு என்று பெயர். நாம் இங்கே உடலழகு என்று கூறுகிறோமே. அதெப்படி இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். அழகு என்பது ஒர் அற்புதமான சொல். - நீலக் கடலுக்குள் நிறைந்து கிடக்கிற, நித்திலக் குவியல்போல, பூத்துக் குலுங்கும் பொன்னிறப் பூக்கள் போல, காய்த்துக் கிடக்கும் நவரசக் கனிகள் போல, அழகு என்னும் சொல்லுக்கு அதிசயமான பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. அழகுக்கு அர்த்தம் தெரிந்து விட்டால், நமது உடலுக்கு அழகு என்பதன் அவசியம் ஏன் என்பது புரிந்து விடும். அழகு என்பதற்குரிய அர்த்தங்கள். இதோ! சுகம், சிறப்பு, எழில், வண்மை, காந்தி, செழுமை, தகைமை, பொன், மதன், மாண்பு, முருகு, வடிவு, வளம், வனப்பு, பொலிவு, ஒழுங்கு, இளமை. இத்தனை அர்த்தங்களா - அழகுக்கு இருக்கின்றன? என்று அறிகிறபோது, அழகின் அவசியம் புரிகிறது. இதன் உட்பொருளை உணர்கிறபொழுதே உள்ளம் அழகுக்காக மன்றாடுகிற வேகத்துடன் புறப்பட்டு விடுகிறது. உரப்பட்டு விடுகிறது. அழகைப் பற்றி புரிந்து கொள்ள, கொஞ்சம் ಸಿ எடுத்துக் கொள்வோம். தெளிவாகத் தெரிந்து விட்டால், இனி எடுக்கப்போகும் பயிற்சிகளில்,