பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 உடலுக்கு この|!P@ தரும் எடைப் பயிற்சிகள் 3 அசைந்து அசைந்து மெதுவாக நடக்கும்படி உங்களை ஆக்கிவிடும். உடல் அசைவும் நடையும் அசிங்கமாகத் தெரியும். 4. வேலை செய்வதிலும் வேகம் இருக்காது. 5. அந்தப் பயிற்சி இருதயத்தைத் தாக்கும். இதய நோயை வரவழைக்கும். இப்படியெல்லாம் ஏன் அவர்கள் பேசுகின்றார்கள் என்றல், உண்மை புரியாததுதான். அதுதரும் நன்மையும் தெரியாதது தான். பு:னையைப் பார்த்த குருடர்கள் கதை தெரியுமல்லவா உங்களுக்கு. அவர்கள் பார்வை கு ைத அப்பாவிகள். இவர்களோ அறிவு குறைந்த அகம்பாவம் பிடித்த பாவிகள். எடைப் பயிற்சியை ஏன் செய்ய வேண்டும்? என்ற கேள்வி ஒன்று எழுகின்றதல்லவா? உண்மை தான். அகில உலகமே செய்து பயன்பெற்று, பலத்தோடும் பராக்கிரமத்தோடும் வாழ்கிற வழிகாட்டும் எடைப் பயிற்சிக்கான விளக்கம் இதோ! - எடைப் பயிற்சி என்பது, ஒழுங்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளுடன், குறைந்த எடைகளை வைத்துக் கொண்டு செய்கிற பண்பாடான பயிற்சி முறைகளாகும். 1. எடைப் பயிற்சியின் நோக்கம் 1. நல்ல உடல்தரத்தையும் திறத்தையும் பெறுவது (Physical Fitness)