பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் தவராஜ் செல்லையா 33 5. எலும்புகள் இணைகின்ற பகுதியான மூட்டுக்களில் (Joints) உள்ள எலும்புச் சோற்றில் (Maாow) இருந்துதான் சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றன. வலிமையான எலும்புச் சோற்றிலிருந்து பிறக்கின்ற இரத்த அணுக்கள், பிறப்பிலே வலிமை பெற்று விடுவதால், செயலிலே செழுமை பெற்று சீரிய காரியங்களை எல்லாம் செய்து முடிக்கின்றன. 6. உடம்பின் தற்காப்புப் படைகளாக விளங்குகின்ற வெள்ளை இரத்த அணுக்களின் வீரிய சக்தியினால், உடலுக்குள்ளே நோயெதிர்ப்புச் சக்தி மிகுதி ஆகிறது. வலுவேறுகிறது. - - 7. உடலெங்கும் இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சென்று பாய்வதால், செல்கள் செழிப்படைய, அதனால் தேகமெங்கும் தெளிவும் பொலிவும் திரண்டு வருகின்றன. 8. சுவாசத்தில் ஆழ்ந்து இழுக்கும் தன்மை அதிகமாவதால், உள்ளுறுப்புக்கள் எல்லாம் நிறைய பிராணவாயுவைப் பெற்று பிரகாசமாகப் பணியாற்று கின்றன. 9. உடற்பயிற்சி செய்பவருக்கு உடலில் உறுதியும், நடையில் பெருமிதமும், சிந்தனையில் நம்பிக்கையும், தினம் தினம் வளர்பிறையாகிக் கொண்டே வருகிறது. தன்னாலும் சிறப்பாக வாழ முடியும். தகுதியுள்ள வராகத் திகழ முடியும் என்ற தன்னம்பிக்கையையும் வளர்த்து விடுகிறது.