பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் போகின்ற எச்சரிக்கைகள், உங்களைப் பயப்படுத்த அல்ல. வழிப்படுத்த சுகப்படுத்த. பயன்களை மிகுதியாகப் பெற்று மகிழ என்பதால் கொஞ்சம் கவனமாகப் படிக்கவும். கட்டாயமாகப் பின்பற்றவும். 6. சில எச்சரிக்கைக் குறிப்புக்கள் (suggestions) 1. எடைப் பயிற்சிகள் பற்றி எளிதாக நினைத்து விடக்கூடாது. எடையைத் தூக்குகிறபொழுதே மூச்சுப் பயிற்சியும் இணைந்து ஒரு சேர செய்யப்பட வேண்டும் என்பதால், பயிற்சி அளிப்பவர் ஒருவரின் மேற்பார்வையில்தான் முதலில் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நன்கு கற்றுத் தேர்கிறவரை ஒருவரின் (Coach) Guðjurfana (Supervision) &LLTuub வேண்டும். 2. பயிற்சிக்குரிய பொருத்தமான ஆடைகள் அணிய வேண்டும். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டோ, முழுக்கால் சட்டை அணிந்து கொண்டோ பயிற்சி செய்யக்கூடாது. செய்தால் சரியான பலன் கிடைக்காது. அரைக்கால் சட்டை, பனியன் அணிந்து கொண்டு செய்வதுதான் நல்லது. அப்படிப்பட்ட உடைகள்தான் பயிற்சி செய்கிற நல்ல மனோ நிலையை, விருப்பமான சூழ்நிலையையும் உண்டாக்கும். 3. பயிற்சி செய்ய உதவும் சாதனங்கள் பழுதுபட்டதாக இருக்கக்கூடாது. புதிதாக இருந்தாலும், தூசு தும்பு இல்லாமலும், பலநாள் பழக்கப்படாததால் துருப்பிடித்து இல்லாமலும் இருப்பதுபோல பார்த்து,