பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.18 உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் மேலே தூக்கி நிறுத்தி, பின் இறக்குகிறபோது, மூச்சை விடவும். - இதுபோல் 10 தடவை (10 Times) செய்யவும். இதற்கு ஒரு சுற்று என்று பெயர். இதைப்போல் 3 சுற்றுக்கள். ஒரு சுற்றுக்கும் மறு சுற்றுக்கும் இடையில் ஒரு நிமிடம் ஒய்வு தரவும். பயிற்சி 2 தலைக்குப் பின்புறமாக ஏற்றி இறக்குதல் ஆரம்பநிலை: பயிற்சிக்கு முன் தரையில் வைக்கப்பட்டிருக்கும் எடை ஏந்தியைத் தூக்கிக் கொண்டு வந்து, தலைக்குப் பின்புறமாக கழுத்துப் பகுதியில் வைத்திருக்கவும். எடை ஏந்திப் பிடிமுறை முதல் பயிற்சிக்கு உரியதுபோல்தான். 1. நன்றாக மூச்சு இழுத்துக் கொண்டு தலைக்கு மேலாக, எடை ஏந்தியை உயர்த்தவும். 2. பிறகு இறக்கிக் கொண்டு வந்து, கழுத்துப் பகுதியில் படாமல் வைத்து, - மூச்சை விட்டு விட்டு பிறகு புதிதாக நன்கு மூச்சை இழுத்துக் கொண்டு மேலே உயர்த்தவும். இப்படியாக 10 தடவை. 3 சுற்றுக்கள். சுற்றுகளுக்கு இடையே ஒரு நிமிடம் ஓய்வு தரவும்.