பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் உடம்பைப் பார்த்திருப்பது போல உள்ளங் கைகளால் எடை ஏந்தியைப் பிடித்திருக்க, கையின் முழு நீள அளவுக்குத் தொங்கவிட்டிருப்பது போல நில். 1. நின்ற நிலையில் நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு குனிந்து வலப்புற பாதத்திற்கு வெளிப்புறமாக எடை ஏந்தியை வைக்க வேண்டும். 2. சிறிது நேரம் கழித்து ஆரம்ப நிலைக்கு வரவும். வந்த பிறகு மூச்சை விடவும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 10 தடவை என்று மாற்றி மாற்றிச் செய்யவும். 3 சுற்றுக்கள். s சில மாற்றங்கள்: 1. நல்ல பழக்கமும் பயிற்சியும் ஏற்பட்ட பிறகு 10 தடவை என்பது 20 அல்லது 30 தடவை என்று கூட்டிக் கொள்ளலாம். 2. அதுபோலவே, எடைகள் குறைவாக இருக்கின்றன என்று உணர்கிறபோது எடைகளையும் அதிகமாக்கிக் கொள்ளலாம். பயிற்சி 6 ஏற்றி உயர்த்தி இறக்குதல் (Press) நோக்கம்: வயிற்றுத் தசைகள், தோள் பகுதித் தசைகள், முதுகுத் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. ஆரம்பநிலை: முதல் பயிற்சிக்கு நிற்பது போல, எடை ஏந்தியைப் பிடித்திருப்பது போல நிற்கவும்.