பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(32 உடலுக்கு அழகு கரும் எடைப் பயிற்சிகள் 3. எடை ஏந்தியை எடுத்து கழுத்து தோள் பகுதிகளில் வைத்துக் கொண்டு. கைகளை இருபுறமும் கொண்டு சென்று பற்றிப் பிடித்துக் கொள்ளவும். (படம் பார்க்க. இது நின்று கொண்டிருந்து செய்யும் பயிற்சிப் படம்) செய்யும் முறை: ! நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, கழுத்துப் பகுதியில் உள்ள எடை ஏந்தியை முடிந்தவரை பின்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்லவும். (சமநிலை இழக்காமல் பார்த்துக் கொள்ளவும்) 2. சிறிது நேரம் கழித்து முதல் திலைக்கு வரவும். வந்த பிறகு மூச்சு விடவும். நிறுத்தி நிதானமாக இந்தப் பயிற்சியைச் செய்யவும்.