பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா 85 வேண்டும். எழும்பி காலைத் துக்கிட உதவி செய்யக்கூடாது. 10 தடவை. 3. அதுபோல் இடது காலைத் தரையில் வைத்து, வலது காலை மேலே செங்குத்தாக உயர்த்த வேண்டும். முழங்கால் மடிப்பும் வளைவும் இல்லாமல் விறைப்பாக இருக்கும்படி செய்யவும். 10 தடவை செய்யவும். 3 சுற்றுக்கள். சுற்றுகளுக்கு இடையே ஒரு நிமிடம் ஒய்வு. பயிற்சி 2 கால் உயர்த்தும் பயிற்சி (2 வகை) ஆரம்ப நிலை: முதல் பயிற்சியைப் போல செய்முறை: 1. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு இடது காலை செங்கத்தாக மேலே உயர்த்தி, பிறகு கீழே இறக்கித் தரையில் வைக்காமல் தரைக்கு மேலாகவே நிறுத்திவிட வேண்டும். (மூச்சு விடவும்). 2. பிறகு நன்றாக மூச்சைஇழுத்துக் கொண்டு வலது காலை செங்குத்தாக உயர்த்த வேண்டும். பிறகு கீழே இறக்கி, தரையில் படாமல் மேலே நிறுத்திவிட்டு, மூச்சை விடவும். 3. அடுத்துத் தரையில் படாமல் இருக்கிற இடது காலை செங்குத்தாக உயர்த்தி இறக்கி, பிறகு வலது காலை ஏற்றி இறக்கி இப்படியாகப் பயிற்சி தொடர வேண்டும். தொடை, கால் பகுதியில்தான் இயக்கமும் சக்தியும் இருக்க வேண்டுமே தவிர, இடுப்பின் மேல் பகுதியிலிருந்து எந்தவிதமான உதவியும் வரக்கூடாது.