பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒளி நம்மை இதமான வழி வகையினைக் காட்டும். சதமான சுகத்தை மீட்டும். சகல செளபாக்கியங்களையும் ஈட்டும். நமது உடல் மகாசக்தி மிக்கது. அதன் அமைப்புகள். இயல்புகள், இணைப்புகள், இயக்கங்கள் எவையும் யாராலும் நுணுகி ஆராய முடியாது. அது அற்புதமானது, அதிசயமானது. ஒப்புவமை இல்லாத படைப்பாகும் என்ற உண்மையை உலகம் இன்று உணர்ந்து கொண்டுவிட்டது.

தானே வளர்ந்து கொள்வது. தேவையானதை வளர்த்து விடுவது, தேவை தீர்ந்ததும் நிறுத்தி விடுவது போன்ற குணாதிசயங்களில், உடலின் இயற்கையான வேலைகள், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன.

அத்தகைய அருமையான தேகத்தினை நாம் அறிந்து கொள்வதோடு நிறுத்தி விடக்கூடாது. அருமையான நம் தேகத்தை மிகவும் அருமையாக நாம் காப்பாற்ற வேண்டும். அப்பொழுது தான் பிறந்ததன் பயனை, பேரின்ப வாழ்வை நாம் வாழ முடியும். பிறரையும் வாழ்விக்க முடியும்.

சக்தியும் வகைகளும்

நம் உடலுக்கு நிறைய சக்திகள் உண்டென்று கூறினோம் அதுவும் சகாயமாய் கிடைக்கிறது. மிக மலிவாகக் கிடைக்கிறது. நாம் எதிர்பார்க்காத நேரத்திலும் ஏராளமாய் கிடைக்கிறது என்பதையும் விளக்கினோம்.

நம் உடலைக் கவனிக்காமல் விட்டாலும், கண்ணுங் கருத்துமாகப் பாதுகாக்காது போனாலும், உடலால் நமக்கு உண்மையாகவே நன்மைகளும் மேன்மைகளும் கிடைக்கத் தான் கிடைக்கின்றன.