பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




மிருகங்கள் தங்கள் உணவு மேல் நடந்து, படுத்து உண்டு மகிழ்கின்றன. மனிதனோ, தங்கள் உணவுக்காகத் தேடி இளைத்துக் களைத்து, நசித்துப் போகிறான்.

கிடைக்கும் உணவுக்கும், கிடைக்காத உணவுக்கும் மனித இனம் தலைகீழாய் திரிகிறது. தடுமாறி அலைகிறது.

இப்படி ஆவலுடன் பறக்கும் மனிதர்களைப் பார்த்து, நாம் ஏன் சாப்பிடுகிறோம்! என்று கேட்டுப் பாருங்கள்.

நாம் ஏன் உண்கிறோம்?

சாப்பிட அலையும் மனிதர்களுக்கு, தாங்கள் ஏன் சாப்பிடுகிறோம் என்பதே புரியவில்லை. புரிவதில்லை.

வயிறு கேட்கிறது. அதை நிரப்புகிறோம் என்பார்கள் சிலர்.

சாப்பிடுவதற்கு ஆசையாக இருக்கிறது. அதனால் சாப்பிடுகிறோம் என்பார் சிலர்.

சாப்பிடும் பொழுது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அதனால் தான் சாப்பிடுகிறோம் என்பார்கள் சிலர்.

இன்னும் சிலர் உயிர் வாழ்வதற்காக சாப்பிடுகிறோம் என்பார்கள். இன்னும் சிலர் சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்கிறோம் என்பார்கள்.

எதுதான் உண்மை?

‘உயிர் வாழ்வதற்காகத் தான் உண்ணுகிறோம்.’