பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

24


கிறது நமது உடல். இதே போல, ஆக்ஸிஜன் என்கிற உயிர்க் காற்றை உடலில் சேமித்து வைத்து கொள்ள முடியாது.

எனவே தான், சுவாசித்தல் தொடர்ந்து செய்யப்படுகிறது. அது வாழ்வுக்கும் வேண்டியதென்கிற முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கிறது. -

இப்படியாக சுவாசிக்கின்ற சூழ்நிலை ஒருவருக்கு சிறிது நேரம் அமையாவிட்டால், உணவு செரிக்கும் வேலை மட்டும் நின்று விடவில்லை. இருதயம், மூளை மற்றும் முக்கியமான உறுப்புக்கள் எல்லாம் செயலிழந்து போகின்றன. அதனால் தான் அந்த மனிதன் இறந்து போகிறான்.

அதனால் தான் ஆண்டவன், காற்றை எங்கும் நிறைத்து வைத்திருக்கிறான். உயிர் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் உயிரிக்காற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்து வைத்திருக்கிறான்.

அறிவில்லாதவர்கள் அதன் முக்கியத்துவம் உணராது ஆணவத்தோடு அலட்சியம் செய்து விட்டு, பிறகு அவதிப்படுகிறார்கள். அறிவுள்ளவர்களோ, இந்த உயிர்க் காற்றைப் பிடித்து, இன்பத்தை அனுபவிக்கின்றார்கள்.

இவ்வாறு நிறையப் பெறுகின்ற ஆக்ஸிஜனும் உணவும் சேர்ந்து கொண்டு, தேகத்திற்குத் தேவையான சக்தியை தயார் செய்து தருகின்றன.

இந்த மாதிரி, ஏற்றமிகு செயலைச் செய்வதில், உடல் ஒரு சிறந்த எந்திரமாகவே இயங்கும் திறமை படைத்-