பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

ஊட்டந்தரும் உணவு முறைகள்


உடலுக்குத் தன் உறுப்புகளைத் தேவையான அளவுக்கு வளர்த்துக் கொள்ளத் தெரியும். புதிதாக வேண்டுமென்றால் பிறப்பித்துக் கொள்ளவும் முடியும். தேவையில்லை யென்றால், அத்துடன் நிறுத்திக் கொண்டு விடவும் முடியும்.

இப்படிப்பட்ட ஆற்றல்கள் சரியாக, நிறைவாக, தொடர்ந்து நடைபெற்று வரவும், உள்ளுறுப்புகளுக்கிடையே நடைபெறும் சகஜமான பணிகள் சலனமற்றுப் போகாது, சீராக நடைபெறவும் கூடிய வகையில் பின்னணியில் இருந்து பலமளிப்பது, நாம் உண்ணும் உணவு தான் என்றால் ஆச்சரியமாக இல்லையா!

ஆர்வத்தோடும் நாம் உண்ணுகின்ற இந்த உணவு வகைகள் தான், ஆச்சரியப்படும் படியான காரியங்களை அணுவளவும் குறையாமல் நிதமும் ஆற்றிக் கொண்டு வருகின்றன.

உணவும் வகைகளும்

உணவு உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. உழைப்பால், அன்றாட அலுவல்களினால் உடைந்து போன செல்களைப்