பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

28


புதுப்பித்தும் புதிதாக படைத்திடவும் உதவுகிறது. செல்களுக்கிடையே செழிப்பினை உண்டாக்க, ஹார்மோன்ஸ், என்சைம் போன்ற சக்திகளைப் பிறப்பிக்க உற்சாக மூட்டுகிறது.

அப்படிப்பட்ட அனைத்து சக்திகளும் மிகுந்த உணவினை யெல்லாம் கார்போ ஹைடிரேட், கொழுப்பு, புரோட்டின், வைட்டமின் என்று வகைப்படுத்திக் காட்டுவார்கள் விஞ்ஞானிகள். அவற்றையும் நாம் விளக்க மாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

1. கார்போஹைடிரேட் (Carbohydrates)

கார்போஹைடிரேட் எனும் மாவு சக்தியானது, அரிசி, கோதுமை போன்ற எல்லா தானிய வகைகளிலும், உருளைக் கிழங்கு மற்றும் எல்லா இனிப்புப் பண்டங்களிலும் பெருவாரியாகக் கிடைக்கிறது.

இந்த மாவு சக்தியானது சர்க்கரை (Sugar) ஸ்டார்ச்சு (starch) என்று இரு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.

சர்க்கரைச் சத்தானது தேன் மற்றும் பலவகைப் பழங்களிலிருந்தும் பாலிலும் கிடைக்கிறது.

ஸ்டார்ச்சு சக்தியானது தாவரங்களிலிருந்து கிடைக்கின்ற உணவு பொருட்களில் மிகுதியாகக் கிடைக்கிறது.

கார்போஹைடிரேட்டின் முக்கிய பணியானது, உடலுக்கு சக்தியை (Energy) அளிப்பதாகும். உணவில் மாவு