பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா.




ஈரல், மாமிசம், மீன், முட்டையின் மஞ்சள் கருவில், உலர்ந்த பழங்களில் நிறையக் கிடைக்கிறது.

4. பாஸ்பரஸ் (Phosphorus)

உலோகச் சத்துக்களில் அதிகம் உள்ளதாக உடலில் திகழ்வது பாஸ்பரஸ் சத்துதான். உடல் உருவாகி விடுவதற்கான செல்களின் திடத்திற்கு இந்தச் சத்துத் தேவைப்படுகிறது.

பாஸ்பரஸ் சக்தி உடலில் குறைந்தால், வலிமையற்ற பற்களும் எலும்புகளும் உடலில் தென்படும். வளர்ச்சி குன்றும், ரிக்கட்ஸ் நோய் வரும். பலஹீனம் உடலில் அதிகமாகும். எடையும் குறையும்.

பாஸ்பரஸ் அதிகமாக உள்ள உணவுப் பொருட்கள்: பால், ஈரல், மாமிசம், பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றில் நிறையக் கிடைக்கிறது.

இன்னும் அயோடின் ஃப்ளோரின் போன்ற உலோகச் சத்துக்கள் எலும்பு பற்கள் போன்ற உறுப்புக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. நாம் அன்றாடம் உண்ணுகின்ற உணவிலேயே இவைகள் கிடைக்கின்றன.

உணவு வகைகளையும், அவற்றின் உபயோகங்களையும் இதுவரை தெரிந்து கொண்டோம்.

உடலைக் காக்கின்ற உணவினை, எவ்வளவு சாப்பிட்டால் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும் என்பதையும், நாம் அறிந்து கொள்வது அத்யாவசியமானதாக அமைந்து விடுகிறது.