பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

உரிய உடல் எடை



ஒருவருக்கு உடல் எடை இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்று சரியாகக் கூறுவது மிகவும் கஷ்டமான காரியம் தான்.

கஷ்டமானது, என்றாலும் கூற முடியாது என்று கூறி விடவும் முடியாது. ஏனென்றால், ஒருவரின் உடல் எடை என்பது ஆண், பெண், வயது - உயரம், உடலமைப்பு (சிறியது, நடுத்தரமானது, பெரியது) உள்ளே உள்ள ஹார்மோன்களின் ஆற்றல், உண்ணும் உணவு, உடற்பயிற்சி போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டு இருப்பதால், இன்னாருக்கு இவ்வளவு தான் என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது என்கிறார்கள்.

மொத்தத்தில் பார்த்து சராசரி கண்டுபிடித்து, ஒரு சராசரி மனிதர் இத்தனை பவுண்டு எடையுள்ளவராக இருக்க வேண்டும் என்று கணிப்பதில், ஒரு சில நிறுவனங்கள் மிகுந்த சிரத்தை யெடுத்துக் கொண்டு கண்டுபிடித்திருக்கின்றன.

சில இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள், தேசிய, உணவு மற்றும் சரிவிகித உணவு அமைப்பு நிறுவனங்கள்