பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


போன்றவை, இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு, ஒரு சில அளவுகளை உருவாக்கித் தந்திருக்கின்றன.

ஒருவரது உடல் நலம், அவரது உடல் எடையுடன் சம்பந்தப் பட்டிருப்பதால் தான், உடல் எடையை அறிந்து கொள்வது மிகவும் அத்யாவசியமாகிறது என்று நம்புகின்றார்கள்.

சமுதாயத்தில் ஏழை பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்றாலும், ஒரு சிலரைத் தவிர, தேவைக்கு மேலே அதிக உடல் எடையுள்ளவர்கள் தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். தேவைக்குக் குறைவான எடையுள்ளவர்கள் அதிகம் இல்லை என்பதும் ஆராய்ச்சியின் முடிவு.

ஒருவரது உடலின் எடை 22 வயதிலேயே ஒரு சராசரி நிலைக்கு வந்து விடுகிறது என்பார்கள். இந்த வயதில் இருக்கும் எடையையே வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து பாதுகாத்து வருவதும் நலமான வாழ்வை நல்கும் என்றும் நவில்கிறார்கள்.

இப்படிப்பட்ட எடையை ஆண்கள் 20 லிருந்து 22 வயதில் பெறுகின்றார்கள் என்றால், பெண்கள் தங்கள் 18வது வயதில் பெற்று விடுகின்றார்கள் என்ற கருத்தினையும் உறுதிப் படுத்துகின்றார்கள்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், வயது ஒன்றாக இருப்பினும், அவர்கள் வளர்ந்துள்ள உயரத்தின் அடிப்படையில் எடையானது வித்தியாசப் படுகிறது ,என்பதை குறிப்பிட்டு சாெல்ல வேண்டும்.