பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பெறுகிறது, எந்த வயதில் இறங்கு முகம் பெறுகிறது என்பதைக் கூட வல்லுநர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள்.

உடல் எடை 25 வயதுவரையில், நிலையாக ஒர் எடை அமைப்பை உறுதி செய்து கொள்கிறது என்பதைத்தான் முன்கூறும் பட்டியல் நமக்கு அறிவுறுத்துகிறது.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சராசரி உடல் எடையானது 25 முதல் 45 வயது வரை ஏறிக் கொண்டே போகிறது. அதாவது கீழ்க்காணும் முறைப்படி.

ஆண்25 வயது 153 பவுண்டு

45 வயது 173 பவுண்டு
65 வயது 164 பவுண்டு

பெண்25 வயது 124 பவுண்டு

45 வயது 139 பவுண்டு
65 வயது 134 பவுண்டு

உடலில் எடை கூடுவது என்பது உடலில் கொழுப்புச் சத்து அதிகம் சேர்வதால் தான். இது 45 வரை கூடிக் கொண்டே போய், 50 முதல் 65 வரை குறைந்து கொண்டே வருகிறது. அதாவது கொழுப்பின் சேமிப்புக் கனமானது (Thickness) அப்படியே இருப்பது போலத் தோன்றினாலும், திசுக்களின் கனமானது மெலிந்து கொண்டே வருவதும் ஒரு காரணமாகும்.

ஆகவே, அன்றாடம் கடமைகளை அழகாக நடத்திச் செல்ல, கனமில்லாத கட்டான உடலை வைத்துக் கொள்வது, எல்லா வகை மனிதர்களுக்கும் கட்டாயம் ஆகிறது.