பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பகுதியில் உருண்டோடும் தன்மையில் இருந்தால், நீங்கள் நன்றாக உடம்பை வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மார்புக்கு மேலாக வயிறு மேடு தட்டியிருந்தால், உங்கள் உடலில் கொஞ்சம் கூடுதலாக எடை கூடியிருக்கிறது என்றே நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

இதற்கும் மேலே இன்னும் ஒரு சோதனை உண்டு. அதனையும் பயன்படுத்திப் பாருங்கள்.

1. நிலைக்கண்ணாடி முன் நின்று கொள்ளுங்கள். வயிற்றை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு கஷ்டப்படாமல், இயல்பாக நில்லுங்கள். உங்கள் வயிறு சற்று விரிந்து வெளிப்புறம் உப்பி காணப்பட்டாலும், அல்லது நீங்கள் சற்று தடித்துக் காண்பது போல் தெரிந்தாலும், அதிக எடை தான்.

2. புஜத்தின் மேற்புறக் கைத் தசைகளை (Upper arm) தொடைத் தசையை, வயிற்றுக்கும் மார்புக்கும் இடைபட்டத் தசையை கொஞ்சம் வலி ஏற்படாமல் கிள்ளிப் பாருங்கள். கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் உள்ள தசைப்பாகம் 1 அங்குலத்திற்கு மேல் பிதுங்கித் தெரிந்தால்;

3. அளக்கும் நாடாவால் வயிறு மற்றும் மார்புப் பகுதியை அளந்து பாருங்கள். அதிகரித்துக் கொண்டு போவது போல் தெரிந்தால்,

4. முன்பு எடுத்த எடைக்கும் வித்தியாசத்தின் இடைவெளி அதிகமானால்.

நீங்கள் அதிக எடையுடன் இருக்கின்றீர்கள் என்றும் அர்த்தம்.