பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

56


ஏற்படுவதை, ஒழுங்கான பழக்க வழக்கங்களால் மன எழுச்சியற்ற முறைகளால், சரிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

மனக்கவலை, மனப்படபடப்பு, எரிச்சல், அடுத்தவர் மீது ஏற்படும் வெறுப்பு போன்ற உணர்வு பூர்வமான நிகழ்வுகள் ஒருவரது பசியை மந்தப்படுத்துகின்ற ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.

ஒரு சில வீட்டிலே விளைகின்ற துன்பங்கள், பணத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகள், குடும்பத்தில் குலவி வரும் நோய் வாதைகள் மற்றும் சமுதாயத்திலே பெறுகிற சரிவுகள். வியாபாரத்தில் விளைந்த நஷ்டங்கள், கஷ்டங்கள் இவற்றை மறப்பதற்காக நிறைய சாப்பிடும் பழக்கத்தைக் கையாளுவதுண்டு.

மேலும் சிலருக்கு, வேலைகள் செய்வதற்கு இடையிலே சாப்பிடுவது என்பது சுவையான பொழுது போக்காக அமைவது உண்டு.

இவ்வாறு சாப்பிடுவது என்பது பரம்பரை பரம்பரையாகத் தொடரும் பண்பு என்றும் கூறுகின்றனர். ஒருவருக்குக் கொஞ்சம் சாப்பிட்டாலும் திருப்தி ஏற்பட்டுவிடும். பலருக்கோ நிறையச் சாப்பிட்ட பிறகும் கூட மனநிறைவே ஏற்படாமல் புலம்புவோரும் உண்டு என்பதாக ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டறிந்திருக்கின்றனர்.

இன்னும் சில செயல்கள், பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் போகின்றன. ஆனால் ஊளைச் சதையை வளர்த்துக் கொள்ள உதவுகின்றன.