பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



திடீரென்று வந்து குவியும் செல்வ செழிப்பு: எதிர்பாராத விதமாக பதவி உயர்வு, நல்ல உடல்நலத்தின் தொடர்ச்சி, விரைந்து தொடர்ந்து வரும் வயது இவைகள் எப்படி ஊளைச்சதைகளை உருவாக்குகின்றன என்பதையும் காண்போம்.

பண வசதியற்ற அல்லது தேவைக்குக் குறைவாகப் பணவரவு உள்ளவர்கள், தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களை மிகச் சாதாரண அளவிலே தான் வாங்குவார்கள், பசியைப் போக்கிக் கொள்ள முயல்வார்கள்.

பணம், பதவி, அந்தஸ்து, சமுதாயத்தில் மேன்மை நிலைக்குப் புதியவர்கள் எல்லாம் தாங்கள் உண்ணும் உணவினை அல்லது வாங்கிப் பயன்படுத்தும் பொருட்களை அதிக சக்தி வாய்ந்தவைகளாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் முனைப்புள்ளவர்களாக இருப்பார்கள்.

கார்போஹைடிரேட்ஸ் போன்ற மாவுச்சத்து, சர்க்கரைச் சத்து, ஸ்டார்ச்சு சத்துகள் அதிகம் உள்ள பொருட்களையே அவர்கள் விரும்பி ஆவலுடன் சாப்பிடுகின்றனர். இத்தகைய கொழுப்பான உணவும், நிறைய உண்ண வேண்டும் என்ற நெறிமாறிய ஆசையும், அவர்களை ஊளைச்சதை நிறைந்தவர்களாக உருமாற்றி விடுகின்றன.

‘சாப்பிடுவதே லட்சியம்’ என்று, சாப்பாட்டுப் பிரியர்களாக பணவசதி உண்டாக்கி விடுகிறது.

இன்னும் பலர் வியாதிகளுக்கு ஆளானாலும் இன்னும் சிலர் செயல்பட முடியாமல் செயலற்றுப்