பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

ஊளைச்சதை உண்டாக்கும் உபத்திரவங்கள்


உதவாத இந்த ஊளைச் சதைகளால், உருவ அழகு கலைந்து போகிறது. உடல் ஆரோக்கியமும் கெட்டுப் போகிறது.

மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கணித்து வைப்பதில் ஆயுள் இன்ஷாரன்ஸ் நிறுவனத்தார் கெட்டிக்காரர்கள். அவர்கள் கூறும் காரணங்களைத் தான் நீங்களும் கேளுங்களேன்!

சராசரி உடல் எடையுள்ளவர்களை விட, ஊளைச்சதையுள்ளவர்களுக்குப் பிரச்சினைகள் தலைமேல் கிடக்கின்றன. அதாவது அவர்கள் வாழ்நாட்கள் குறைவாகிப் போகின்றன. அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் உதவாத சதைகளே, அவர்களது உயிருக்கு எமனாகி விடுகின்றன.

எப்படி என்றால் அதற்கு அவர்கள் கூறும் காரணம் அறிவியல் பூர்வமானதாகவே அமைந்திருக்கிறது.

1. சுவாச நோய்கள் : ஊளைச் சதையுள்ளவர்களுக்கு சுவாச நோய்கள் சகஜமாகவே தோன்றி விடுகின்றன.