பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

68



ஆனால் ஒரு சிலர், உணவு அளவையும் குறைக்க விரும்பவில்லை. ஆனால், உடல் சதை மட்டும் கரைந்தோடி விட வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள்.

உடல் மொத்த எடையில் 25 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஆண்டாண்டுகளாக ஆசையோடு உண்டு அருமையாக வளர்த்தக் கொழுப்புகளை, ஆவேசமாக எண்ணிய அளவிலேயே அழித்து விட முடியுமா என்ன? சம்பூரண முனிவராக மாறி சாபமிட்டால் கூட முடியாதே!

ஒருவர் ஒல்லியாக வேண்டுமென்று முயற்சிக்கிற பொழுது, முதலில் அவர் இழப்பது உடலில் உள்ள தண்ணிரையும் தசைச் செல்களையும், ஆனால் கொழுப்புப் பகுதிகளை இவர் உடனே இழப்பதில்லை. உடல் எடை குறைவதைப் பார்த்து அவர் சந்தோஷம் அடைகிறார்.

ஏன்? கொழுப்பு கரைந்து விட்டதென்று. அப்படி இல்லை. கொழுப்புச் சத்து என்பது பஞ்ச காலத்தில் நெல்லை சேமித்து வைத்துத் தரும் கதிர் போல. உடலுக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் போது, கொழுப்பு கரைந்து,உடலை காக்கும் சேமிப்பு சக்தியாகும்.

இந்த சிறு ஆர்ப்பாட்ட முயற்சிகளுக்கு இது இணங்கிப் போகுமா என்ன? கரைந்து ஓடிவிடுமா என்ன?

டாக்டர் கிளார்க் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கூறுகிறார். உணவை குறைத்து விரதம் (Diet)