பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

70



மிகவும் அதிக அளவில் தசைகளைக் கரைத்தால் 12 கிலோகிராம் குறைக்கலாம். அதுவும் 12 முதல் 18 சதவித வெற்றி என்று தான் கூறலாம்.

வேகமாக உடலின் எடையைக் குறைத்து விடுகின்ற ஊளைச்சதை உள்ளவர்கள், சுவற்றில் பட்ட பந்து அதே வேகத்தில் திரும்பி வருவது போல, அதே வேகத்தில் குறைந்த காலத்தில், மீண்டும் அதே ஊளைச்சதைக்கு ஆளாகிப் போகின்றார்கள்.

டாக்டர் கேம்ப்பெல் என்பவர் 70 பேர்களை வைத்து ஆராய்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் 14 வாரங்களில் 29 கிலோகிராம் எடையை இழந்து விட்டவர்கள், மிகக் குறுகிய காலத்திலே பழைய நிலைக்கு வந்து விட்டதை அறிந்து, வெளிப்படுத்தினார். டாக்டர் டிரேனிக் என்பவர் 137 பேர்களை வைத்து சோதனை செய்து பார்த்தார். அவர்கள் அனைவரும் 30 கிலோகிராம் எடையைக் குறைத்தவர்கள். அவர்களில் 105 பேர்கள் ஒரு ஆண்டு காலம் முழுவதும் குறைத்துவிட்ட உடல் எடையுடனே வாழ்ந்தனர். ஆனால், 6 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால், 9 பேர்களைத் தவிர, மற்ற எல்லோருமே முன்பிருந்த அதே எடைக்குத் திரும்பி விட்டனர் என்பதுதான் அவர் கண்ட உண்மையாகும்.

இந்த ஆராய்ச்சிகளையும் முடிவுகளையும் ஏன் வற்புறுத்தி எழுதுகிறேன் என்றால் அவசரப்பட்டு உடனே எடையைக் குறைத்து விட வேண்டும் என்று குறுக்கு வழியில் மருந்துகளுடன் முயல்பவர்கள், மருத்து முறையிலும் விரைவில் அபாயகரமான நோய்களுக்கு அளாகி விடுகின்றனர்.