பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்தால், பலர் உயிரிழந்து போயிருக்கின்றனர். அதாவது 2 மாதங்களுக்கு மேல் கட்டாய உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் என்று கூறுகிறார் டாக்டர் ராமச்சந்திரன்.

அந்த அபாயகரமான் நோய்களில் மூக்கடைப்பு. நிமிர்ந்து நிற்க இயலாத வளைதல் தன்மை. அதிக மனப்படபடப்பு, வலிப்பு நோய், திடீர் மயக்கம், சிறுநீரகக் கோளாறு, மனத்தளர்ச்சி போன்றவையும் அடங்கும்.

உணவை சரியான அளவு உட்கொள்ளாது கடுமையான பத்தியத்துடன் அதிகமாக உடல் எடையைக் குறைக்கும் பொழுது, கெடோசிஸ் (Ketosis) என்ற வியாதி வந்து விடுகிறது என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி என்பவர். அவர் மேலும் கூறுகிறார். இப்படி உணவில்லாமல் எடை குறையும் பொழுது, உடலில் மாவுச்சத்து குறைந்து போகிறது. உடலில் உள்ள கொழுப்புச்சத்து அப்பொழுது கரைந்து சக்திதர முயல்கிறது. அவ்வாறு அந்தக் கொழுப்புச் சத்து உடைகிற சமயத்தில் ஏற்படுகின்ற சூழ்நிலை மிகுந்த அபாயகரமானது. அந்த பயங்கர சூழ்நிலை களைப்பினைத் தருவது மட்டுமல்ல. மனக்குழப்பத்தை விளைவிப்பதுடன் சில சமயங்களில் விழித்தெழா மயக்கத்தையும் (Coma) உண்டு பண்ணி விடுகிறது என்கிறார்.

உண்மை தான்; பட்டினி கிடப்பவன் படபடப்புக்கும் பயங்கரமான கோபத்துக்கும் ஆளாவது சகஜம் தான்.

அதிகப் பட்டினி என்பது ஆரோக்கியத்திற்கே நல்லதல்ல. அதற்கு சரியான ஒரே ஒரு வழி உடற்பயிற்சி தான்.