பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




உடல் எடையைக் குறைத்து, ஒல்லியாக வருவது என்பது, உடலில் செலவாகின்ற சக்தியை அதிகரித்து, உடலுக்கு வரும் சக்தியின் அளவைக் குறைப்பது தான்.

உடற்பயிற்சி என்பது உடலில் உள்ள கொழுப்புச் சக்திகளை கரைக்கும் முயற்சியாகும்.

உடலில் உள்ள தண்ணீர் சக்தியினை வெளியேற்றி, தொளதொளத்துப் போயிருக்கும் சதைகளை, இறுகிய தன்மையுள்ள தசைகளாக மாற்றும் முயற்சியாகும். இப்படிப்பட்டப் பயிற்சி முறைகளை வீட்டிலிருந்து தனியாக செய்து பழகலாம்.

உடற்பயிற்சி அரங்கங்களுக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

உடல் நலச்சங்சங்கள் (Health Club) உண்டு. அங்கே பயிற்சிகள் செய்யலாம்.

எது செய்தாலும், டாக்டரின் அறிவுரை தேவை.

முறையான அளவான உணவுக் கட்டுப்பாடு, தேவைப்படுகின்ற பயனுள்ள உடற்பயிற்சிகள், முக்கியமான சில மாத்திரைகள், மற்றும் உண்மையான ஆர்வம், விடாத முயற்சி, தன்னம்பிக்கை இவைகள் தாம் ஊளைச் சிதைகளை ஒட்டி விடக்கூடிய உண்மை உதவிகளாகும்.

இதற்கான பயிற்சி முறைகளைத் தொடர்ந்து காண்போம்.