பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




குறைக்காமல் உடல்சதையை குறைக்க வரும் மாற்று உபாயம் அல்ல.

கீழ்க்கானும் பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம். நேரமும் வாய்ப்புமிருந்தால், வெளியிடங்களில், பயிற்சியிடங்களில், ஆடுகளங்களில் கூட செய்யலாம்.

1. (1) கால்களை சேர்த்து வைத்து, வயிறு உள்ளடங்கியிருக்குமாறு அழுத்தி வைத்து, கைகள் இரண்டும் பக்கவாட்டில் இருப்பது போல, விறைப்பாக நிற்கவும்.

2. பிறகு, கைகள் இரண்டையும் பின்புறமாக வேகமாக வீசி நிறுத்தவும். இப்பொழுது உள்ளங்கை பின்புறம் வீசி, மீண்டும் முதல் நிலைக்கு வரவும்.

கையை நீட்டும் பொழுது மூச்சை நன்றாக இழுத்து, முதல் நிலைக்கு வரும் பொழுது மூச்சை விடவும். 10 முறை செய்யவும்.

2. (1) முதற்பயிற்சிக்கு நிற்பது போல. நிமிர்ந்து விறைப்பாக நிற்கவும். அப்பொழுது கைகள் இரண்டையும் மடித்துத் தோள்புறத்தில் வைக்கவும்.

2. தோளில் இருக்கும் கைகளை எடுத்து தோளுக்கு அடிப்புறமாக (அக்குளுக்கு நேராக) பின்புறமாக முடிந்தவரை நீட்டவும்.

3. பிறகு, தோளுக்கு மேலே கைகளை கொண்டு வந்து, அங்கிருந்து, பின்புறமாக (முதுகுப்புறமாக) முடிந்தவரை கைகளை நீட்டவும்.