பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

76



கைகளைப் பின்புறம் நீட்டும்போது மூச்சிழுத்து தோளுக்குக் கொண்டு வருகையில் மூச்சு விடவும். 10 முறை செய்க.

3. (1) முழங்காலில் நின்று, அப்படியே பின்புறமாக உள்ள உள்ளங்கால்களில் அமரவும். தலையை நிமிர்த்தி, விறைப்பாக அமரவும். முட்டியில் கைகளை வைக்கவும்.

2. பிறகு நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, முன்புறமாகக் குனிந்து முகவாயானது (Chin) மார்பினைத் தொடுவது போல குனியவும். பின்னர், தலையை நிமிர்த்தி, முன் நிலைக்கு வந்ததும், மூச்சை விடவும். 10 முறை செய்க.

அதுபோலவே தலையைப் பின்புறமாகச் சாய்த்து, தோள்களில் தலையின் பின்புறம் தொடுவது போல முயற்சித்து, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். 10 முறை செய்க.

4. (1) 3வது பயிற்சிக்கு அமர்வது போல் அமர்ந்து தலையை விறைப்பாக வைத்து மடிமீது கைகளை வைத்து அமரவும்.

2. இப்பொழுது நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு தலையை வலப்புறமாக மெதுவாக சுழற்றி வந்து முகவாய் தோளில் படுவது போல செய்து, அப்படியே பின்புறத் தோளில் படுவது போல செய்து, அப்படியே பின்புறத் தலை முதுகுப்புறமாக முடிந்த வரை பின்தோள்புற தசைகளைத் தொடுமாறு செய்து, பிறகு இடப்புறத் தோளில் முகவாய்