பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




குறிப்பு : ஒரு காலின் குதிகாலை உயர்த்தலாம். ஆனால் மற்றொரு கால் தரையை விட்டு நகரக்கூடாது.

அதாவது ஒரு பொருளைத் தூக்கி வேகமாக வீசி எறிவது போன்ற பாவனையில்; கைகளை உயர்த்துவது விரைவாக இருக்க வேண்டும்.

30 முறை எசய்யவும்.

13. (1) கால்களை விரித்து நின்று, கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து விறைப்பாக நிற்கவும்.

2. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு வலது கை இருக்கும் பகுதிக்கு இடது கை வருவது போல், இடுப்பைச் சுற்றி நிற்க வேண்டும். அதுபோல மறுபுறம் திருப்ப வேண்டும். இடுப்பு நன்றாக முறுக்கப்படுவது இப்பயிற்சியில் மிகவும் முக்கியமாகும். 20 முறை செய்க.

14. (1) மல்லாந்து படுக்கவும். கால்களை விறைப்பாக நீட்டி, இருகால்களையும் இணைத்தாற் போல் வைத்து, உள்ளங்கைகளை தரையை நோக்கி இருப்பது போல, இருபுறமும் கைகளை வைத்து படுக்கவும்.

2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, கைகளை தரையில் நன்கு அழுத்தியபடி, கால்களை (பிரிக்காமல்) அப்படியே மேலே உயர்த்தவும். 45 டிகிரியில் சிறிதுநேரம், 90 டிகிரிக்கு நேரே உயர்த்தி சிறிது நேரம். பிறகு முதல் நிலைக்கு வரவும். மூச்சு விடவும். 20 முறை செய்க.