பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

84




2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, அப்படியே இரண்டு கால்களையும், பக்கவாட்டில் முடிந்த உயரத்திற்கு உயர்த்தவும். பிறகு மூச்சு விடவும் 20 முறை செய்க.

20. (1) குப்புறப்படுக்கவும். முகவாய், தரையைத் தொட, கைகளை பக்கவாட்டில் வைத்து, பாதங்கள் தரையில் பட படுக்கவும்.

2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, ஒரு கை மட்டும் உயர்த்தவும். மறுகால் தரையில் நன்றாக அழுந்தியிருக்கவும்.

பிறகு, இரண்டு கால்களையும் மாறி மாறி உயர்த்தவும். இடுப்புப் பகுதியானது, தரையில் நன்கு அழுந்தியிருப்பது போல் பார்த்துக் கொள்ளவும். 20 முறை செய்யவும்,

கால் பகுதிகளுக்கான பயிற்சிகள் :

நின்று கொண்டே, ஒரு காலை உயர்த்துதல் மடக்குதல் போன்ற பயிற்சிகளை விட நடத்தல். ஒடுதல்,கயிறு தாண்டிக் குதித்தல் போன்ற பயிற்சிகள் நல்ல பலன்களைத் தரும்.

நடத்தல் (Walking) நடத்தல் என்பது ஒர் இயற்கையான இனிமையான பயிற்சியாகும். நடப்பதானால் எந்த மனிதரும், ஏன் நோய்வாய்ப்பட்டவரும் கூட துன்பமடைய மாட்டார்.