பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

மெது ஒட்டம் மேனிக்கு நல்லது


உடலைச் சீராக, நேராக, ஜோராக வைத்துக் கொள்ள முதலில் உணவுக்கட்டுப்பாடு தேவை என்றும், அடுத்து உடற்பயிற்சிகள் இன்றியமையாதவை என்றும் முற்பகுதிகளில் விவரமாகக் கூறியிருந்தோம்.

என்னென்ன உடற்பயிற்சிகள் செய்தால், உடலுக்கு உதவும் என்றும் சில பயிற்சிகளை தேர்ந்தெடுத்துத் தந்திருந்தோம்.

உடற்பயிற்சிகளிலே மிகவும் அதிசக்தி வாய்ந்தது என்று மருத்துவ மேதைகளும் உடற்கல்வி வல்லுநர்களும் கருதுகின்ற மெது ஒட்டம் பற்றி இந்தப் பகுதியில் இனி காண்போம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னே தெருக்களில் ஒடுவது என்பது பைத்தியக்காரத்தனமான செயல் என்று கருதப்பட்டது இப்பொழுது மெதுஒட்டம் என்பது மேதைத்தனம் ஆகிவிட்டது.

உலக நாடுகளில்

உலக நாடுகளில் மெது ஒட்டம் ஓர் ஒப்பற்ற காரியமாக மாறிவிட்டிருக்கிறது.