பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



பின்லாந்து நாட்டில், அந்த மக்கள் தொகையில் 55 சதவிகித மக்கள் மெது ஒட்டத்தில் ஈடுபட்டுப் பயன் பெறுகின்றார்கள்.

ஸ்வீடன் தேசத்தில், மக்கள் தெருக்களில் ஒடுகின்றார்கள் என்பதால், பலர் அவற்றை அடைத்து விடுவதால், புதிதாக ஒடுவதற்காகப் பாதைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன என்ற செய்தி சுவையானதாக இருக்கிறதல்லவா?

அமெரிக்க நாட்டிலே 25 மில்லியன் எண்ணிக்கைக்கு மேலாக, பதிவு பெற்ற மெது ஒட்டக்காரர்கள் இருக்கின்றார்கள். தினம் தினம் ஒடி மகிழ்கின்றார்கள்.

அதையும் மிஞ்சி விட்டார்கள் சோவியத் யூனியன் மக்கள். மெது ஒட்டக்காரர்கள் ஒடும் தினத்தைக் கொண்டாட அவர்கள் முயன்ற பொழுது 47 மில்லியன் தொகைக்கு மேலாக கலந்து கொண்டார்கள் என்றால், எத்தனை வியப்பாக இருக்கிறது நமக்கு!

இவ்வாறு எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறதே? என்னதான் இதில் இருக்கிறது?

பல ஆண்டுகளாகப் பார்வையிட்டு, பரிசோதித்து, இறுதியில் இதன் மகிமையை வல்லுநர்கள் வெளிப்படுத்திய காரணம் தான், இத்தகைய எழுச்சிக்குக் காரணமாகும்.

ஆண் பெண் பாகுபாடின்றி, சிறுவர் முதியவர் என்ற வயது வித்தியாசமின்றி, உடலில் பருமன், ஒல்லி என்ற வேற்றுமையின்றி இந்த மெது ஓட்டத்தில் பங்கு பெறலாம்.