பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 அதனால், எல்லோரையும் நான்கு பிரிவுக்குள் கொண்டு வந்து விடுகிறோம்.

1. புதிதாக ஓடிப்பழகுபவர்கள், உடல் கனமானவர்கள்.

2. ஓடி சிறிது தேர்ச்சி பெற்றவர்கள்.

3. நலமான தேகம் உள்ளவர்கள்

4. வயதான விளையாட்டு வீரர்கள்.

1. உடலில் அதிக எடை மிகுந்தவர்களாக, ஆனால் புதிதாக மெது ஒட்டம் ஓடுபவர்கள் குறைந்தது 3 அல்லது 4 மாத காலமாவது ஓடிப்பழகிட வேண்டும்.

அவர்களைப் போலவே, அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள், இதய நோய் உள்ளவர்கள், மற்றும் உள்ளுறுப்புக்களில் ஆற்றல் குறைந்தவர்கள் அனைவரும், மருத்துவர் ஆலோசனையுடன் இதில் பங்கு பெறலாம்.

அவர்களுக்கு முடிந்தவரை முதலில் நடக்கலாம். வேகமாக நடக்கலாம், மெதுவாக ஓடலாம். முதலில் 3 நிமிடத்தில் தொடங்கி, பிறகு நாளாக ஆக, 20 நிமிடங்கள் வரை உயர்த்திக் கொண்டே போகலாம். நேரத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக உயர்த்திக் கொண்டு ஓடிப்பழகி பயன்பெற வேண்டும்.