பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாரம் - ஆதாரம் பல்லவி பத்தினியே உன் போல் இத்தரை மீதினில் மற்றவர் யார் புகல்வாய்? - தர்ம (பத்தினி) அநுபல்லவி சத்திய மாகவே தாய்க்குப் பின் தாரம் தாரத்தினால் அல்லவோ சம்சாரம்: (பத்தினி) சரணம் பந்து ஜனமெல்லாம் வீண் பரிவாரம்; பாரினில் அவரால் ஏதுப காரம்? அந்தரந் தனிலும் உதவுவாள் தாரம்; ஆபத்து வேளையில் ஆகும் ஆதாரம் (பத்தினி) - கண்ணகி நிலவே நிலவே ஆடவா! நிலவே நிலவே ஆட வா! நீயன்புடனே ஓடி வா! மலராம் அரும்பின் எழில் மேவும் மரகத மணியுடன் ஆட வா! (நிலவே) நீல வானக் கடல் நிதியே! நித்தில மணியே! வெண்மதியே! சீலம் அருளறம் சேரும் குணவதி சிங்கார நிதியுடன் ஆட வா! (நிலவே) மண்ணில் அமுதம் சிந்திடுவாய்! - நீ மழலைக் கமுதம் தந்திடுவாய்! உன்னில் இவளே உயர்ந்தவள் அதனால் உல்லாசமாக ஆட வா! (நிலவே) - சொர்க்கவாசல் 85