பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்அறியும் தெய்வம் அன்னை பிதா தொகையறா முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா - அவர் மொழிந்த தெல்லாம் நமக்கு வேதமடா - மனிதா பல்லவி தன்பொருளும் தன்சுகமும் தனது பிள்ளை என்றே அன்பு கொண்ட அவர்க்கீடு ஏதுமில்லை! சரனம் செல்லரித்த ஆலமரம் அடிப்புறம் காய்ந்தாலும் ஜீவனற்றுப் போகாமலே - அதன் பிள்ளையெனவே விழுது பின்பு வந்து கிளைதாங்கிப் போனுகின்ற செயல் போலே... நல்லகுடி வழிவந்த மக்கள்குணம் அதுவென்றே சொல்லுதடா தெள்ளுதமிழ் நூலே - அதை உள்ள மதில் உணராத பிள்ளைகளுக் கேகீரிப் பிள்ளை அணிற்பிள்ளைகளும் மேலே (முன்) "தெய்வத் தாலாகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்பதாலும் நீ செய்வன திருந்தச் செய் - மென்மேலும் உண்மை ஜெயிக்குமடா தம்பி எந் நாளும்! மலையது கலங்கிடினும் கலங்காதே - மனம் கலங்காதே மானமற்ற பேடியென வாழாதே! உலகிலுன் கடமை செய்யத் தவறாதே - அதற்கு உயிரைநீ பெரிதெனவே மதியாதே! (முன்) 91