பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் : ஆண் பெண் : ஆண் “பட்டணம் நான் போகமாட்டேன்!” பட்டணந்தான் போகலாமடி - பொம்பளே! பணங்காசு தேடலாமடி - நல்ல கட்டாணி முத்தே யென்கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே! டவுனுப் பக்கம் போவாதீங்க - மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது - பயணம் வேண்டான்னாக் கேளு மாமா! கெட்டவங்க பட்டணத்தை ஒட்டிக் கோனு மென்பதாலே பட்டிக்காட்டை விட்டுப் போட்டுப் பலபேரும் போவதாலே கட்டுச்சோத்தெக் கட்டிக் கொள்ளடி - பொம்பளே! தட்டிச் சொன்னாக் கேக்க மாட்டண்டி - நல்ல கட்டாணி முத்தே யென் கண்ணாட்டி நீயும் வாடி! பொண்டாட்டி தாயே! அங்கே வேலை யேதுங்க? கூலி யேதுங்க? வெக்கக் கேட்டேச் சொல்றேங் கேளுங்க காலேஜூப் படிப்பு காப்பி யாத்துதாம்; பிய்யேப் படிப்பு பெஞ்சு துடைக்குதாம்; ஆளை ஏச்சு ஆளும் பொழைக்குதாம், அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக் கலையுதாம் மேலே போனது நூத்துல ஒண்ணாம்; மிச்ச முள்ளது லாட்டரி அடிக்குதாம்; ஒன்னான சாமியெல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே - மாப்பிளெ உன்னாலே என்னாகும் எண்ணாமப் போனா பின்னாலே கேடு மாமா? ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன் நைசாப் பேசி பைசா இழுப்பேன் S5