பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிவான மொழிபேசி பிணிதீர்ப்போமே அனுதினம் (நோ) அன்பு நிலந்தனிலே இன்ப ஆனந்தமாகிய நீர் பாய்ந்து அம்புவிமேல் அவதாரம் கொண்டாய் அமுதே தாலேலோ தாலேலோ. பணிசெய்வதே மாதர்கடமை - கொண்ட மணவாளரின் அருமை பெருமை கண்டு (பணி) குணமான அன்பு குறையாமல் துணைசெய்வேனே சுவாமிக் கடிமை நான் அணியாடை அலங்காரம் அணையின் சிங்காரம் இனிதான் ஆகாரம் இதமாக உபசாரப் (பணி) - வேலைக்காரி அலங்காரம் எதற்கு? பல்லவி அழகும் குணமும் அமைந்த பெண்ணுக்கு அலங்காரம் எதற்கு? (அழகும்) அதுபல்லவி செழித்திடும் மலர்க்கொடியைப் போலே செயற்கையில்லாத இயற்கைமேனி. (அழகும்) சரணம் தங்க ஆகைகள் முத்தாரம் - அவை அங்கத்துக்கே பெரும்பாரம் - குல மங்கையர்க்கே ஒரு மஞ்சள் கயிறுதான் ஆதாரம் - சிங்காரம் மங்களமாகிய மனையலங்காரம் இத்தவர்க்கே அனுதினம் உபசாரம் இங்கிதப் பெண்கள் தன்னால் சம்சாரம் என்றே திணைக்கவும் வேண்டுமிந்த நேரம் (அழகும்) i04